இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேற்றச்சொல் – நாலடியார் 259

நேரிசை வெண்பா

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா(து)
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு 259

- அறிவின்மை, நாலடியார்

பொருளுரை:

தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரை உண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையே விரும்பும் ஈயைப்போல், இழிந்த குணங்களே பொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார் வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்த அறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்?

கருத்து:

அறிவில்லார் இழிந்த இயல்புகளையே நாடுவர்.

விளக்கம்:

பூமிசைதல் என்பது தேன் மிசைதல், "பூவுண் வண்டு"1 என்பழிப்போல;

நெஞ்சினார்க்கு - புல்லறிவினார்க்கு; தெரிந்தெடுக்கப்பட்ட தகுதிநிலை ஈண்டுத் தேர்வெனப்பட்டது.

சொற்களுள் இவை உயர்வென்று சிறந்தோரால் தெரிந்தெடுக்கப்பட்ட அவற்றின் தகுதிநிலை;

இழிந்தவை கலந்த நெஞ்சினார்க்கு யாது பயன்றரும் என்பது பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-22, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே