வலம்புரிக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பூதபை சாசம் பொறுக்கொணா நேத்திரநோய்
கீத மிகுசெவிநோய் கேவ(ல்)விக்கல் - ஓதுகுளிர்
தோடமொடு மேகங்கள் சொன்னவையெ லாம்நடுங்கி
ஓட வலம்புரியை யுன்

- பதார்த்த குண சிந்தாமணி

இக்காய் விழிநோய், செவிநோய், கேவல், விக்கல், சீதசுரம், ஆயாசம், மேகம், கூன் விழுதல் முதலியவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Aug-22, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே