வாய்விடங்கம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாண்டுகுஷ்டம் குன்மம் பருந்தூல நோய்வாதந்
தீண்டு திரிவிடஞ்சி ரந்துண்டம் - பூண்டமடி
நோய்விளங்கக் காட்டாத நுண்கிருமி யாசனப்புண்
வாய்விளங்கங் காட்டவிடு மால்

- பதார்த்த குண சிந்தாமணி

வாய்விடங்கம் பாண்டு, குட்டம், குன்மம், உடற்பருமன், வாயு, பாம்பு, தாவரவிடங்கள் போன்றவற்றை நீக்கும்; குழந்தைகட்கு நாசி, வயிறு இவற்றிலுண்டாகும் பிணியறிதற்கான சன்னகிருமியை அறிய உதவும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Aug-22, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே