வானில் வட்ட நிலவாய் வந்தாய் நீயே வடிவழகோ - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 5 / காய்)
(1, 4 சீர்களில் மோனை)
வானின் நீலம் உன்றன்
..வண்ண விழியில் காண்கிறதே;
தேனில் மிதக்கும் இதழ்கள்
..திறந்து தமிழைப் பேசிடுமோ?
வானில் வட்ட நிலவாய்
..வந்தாய் நீயே வடிவழகோ?
போனில் சிரித்துப் பேசும்
..போதுன் பேச்சும் புதுப்பொலிவே!
- வ.க.கன்னியப்பன்