அணு அணுவாய்

அணு அணுவாய் என்
ஒவ்வொரு அணுவிலும்
முழுதாய் கலந்துவிட்ட
என் அணுவே...
உன் இளமை என்ன
' ஹிரோஷிமா ' அணுகுண்டா?
என்னில் இத்தனை சேதங்களை
ஏற்படுத்தி விட்டதே...!
தன்னிச்சையாய்
என்னால் ஏதும் செய்யமுடியாமல்
உன்னை சார்ந்தே எந்தன்
வாழ்க்கைச் சக்கரத்தை
சுழல விட்டுவிட்டதே..
ராமன் பாதம்பட்டு
சாபவிமோசனம் பெற்ற
அகலியாய்...
உன் பாதம் பட
கல்லாய் வாழ்கிறேனடி...
காலம் எப்போது கனியும்?
உன் கடைக்கண் பார்வை
எப்போது என்னில் படரும்?
உன் பூ பாதம்
எப்போது என்மீது பதியும்?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (7-Aug-22, 9:33 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : anu anuவாய்
பார்வை : 156

மேலே