கற்கண்டாய் இனிக்கும் காண்

போராட்ட மென்றே பொழுதோட்டிப் போகாமல்
நீராட்டி நித்தம் நிலமுழுவாய் – சீராக
நெற்கன்றைச் சேற்றில் நடுமுனக்கு வேளாண்மை
கற்கண்டைப் போலினிக்கும் காண்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Aug-22, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 115

மேலே