முல்லைதான் விரிந்து பாடும் மோகன இராகம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

முல்லைதான் விரிந்து பாடும்
..மோகன இராகம் தானே
எல்லையும் இல்லா வானில்
..ஏற்றமாய்க் காதல் சொல்லும்!
ஒல்லையில் விரைந்து வாராய்
..ஓங்கிடும் இன்பந் தானே;
மெல்லென வீசும் தென்றல்
..மேனகை சொல்லு வாளோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-22, 10:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே