கார்போக அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கார்போக மாம்அரிசி கண்டால் கரப்பான்புண்
பீர்சருவ நஞ்சிவைபோம் பித்தமுண்டாம் - பார்மீதில்
வாத கபம்நமைச்சல் வன்சொறிசி ரங்குமறுஞ்
சீத மலர்க்குழலாய் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் கடுவன், இரணம், பாம்புவிடம், தாவர விடங்கள், வாத சிலேட்டும நோய்கள், தினவு, யானைச் சொறி, கிரந்தி ஆகியவை விலகும்; பித்தம் அதிகரிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-22, 7:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே