வாலுழுவை அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வயிற்றுக் கடுப்புவலி மாறாக் கிராணி
பயித்தியங் காச(ம்)மல பந்தஞ் - சயிக்கவொணாச்
சூதிகா வாதமும்போந் தொல்வா லுழுவைவிதைக்
காதிநவ சித்த(ர்)மொழி யாம்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வரிசியை உண்டால் வயிற்றுக்கடுப்பு, கிராணி, பித்தம், இருமல், மலக்கட்டு, சூதிகாவாதம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-22, 7:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே