ஆறாம் வகுப்பு இ பிரிவு

எழுத்துக்கள், வார்தைகளாகவும்
வார்த்தைகள், வாக்கியங்களாகவும்
வாக்கியங்கள், கவிதைகளாகவும்
காகிதத்தில் கடிதமான நாட்கள் ..

அவள் அருந்திய தேநீர் டம்பளருக்கு
காத்திருக்கும் ஈக்கள் போல்
அவள் வருகைக்கு காத்திருக்கும்
எனது கண்கள்..

தமிழ்ப் பாட வேலை
தாலாட்டிய நேரங்கள்,
தூங்குமூஞ்சி மரக்காற்று
தூங்கவைத்த நிகழ்வுகள்,

ஐந்து மணி ஆனவுடன்
5A பேருந்தை நோக்கி
போர்தொடுத்தோடும் என் பூம்புகார்
முத்துக்கள் ...


பென்சிலின் ஆடை அவிழ்த்து
கஞ்சியில் துவைத்து
ரப்பருக்கு காத்திருந்தோம்

பேனா மை கொண்டு
பெரிய மீசை வரைந்து
பிரெஞ்சு தாடி வைத்திருந்தோம்

எங்களுக்கு,
துன்பத்தின் எல்லை
திங்கள் கிழமை காலை
இன்பத்தின் எல்லை
வெள்ளிக்கிழமை மாலை ..

மழை காலங்களில் மட்டும்
செய்தி பார்க்கும் பழக்கம் -அதில்
வார்த்தைகளை விட
வாசிப்பவரை விரும்புவது வழக்கம்..

படிக்கும் போதே
பெயருக்கு அருகில்
"அடங்கவில்லை" என்ற பட்டம்

அப்போது,
உலகின் மிகப்பெரியக் கெட்ட வார்த்தை
"காதல் "
அர்த்தம் தெரியாத சொல் "சாதி "
பார்க்க தெரியாத ஒன்று "மதம் "

ஐந்துரூபாய்க் கட்டணத்தில்
அன்று பார்த்தத் திரைப்படம்
மூக்கொழுக முன்னின்று
அங்கு எடுத்த புகைப்படம் ..

திருமணம் ஆகி தீ யை
சுற்றி வரும் மணமக்களை போல்
மூன்று குழுவை சுற்றி வரும்
தயிர் சாதம், உருளை கிழங்கு..

தேர்வு எனும் மேடையில்
பாடல் வரி அரங்கேற்றம்
பாடம் எனும் ஓடையில்
திரைக்காட்சிகளின் சிறுசீற்றம் ..

காந்தி சிரிக்கும் நோட்டுகளாய்
அலைந்துத் திரியும் எங்களுக்கு
ஆசைகளின் ஊற்றுகளாய்
அந்த ஆறாம் வகுப்பு "இ"பிரிவு ..


❤️யுவன் ஹரி✍️..

எழுதியவர் : ஹரிகரன்.பு (9-Aug-22, 2:30 pm)
சேர்த்தது : ஹரிகரன்
பார்வை : 115

மேலே