மன்னித்துவிடு

மன்னித்துவிடு ..

உலகம் சுற்றிய
ஊர்க்குருவியே,
வழியறியா வாசல்
வந்ததேனோ,
குஞ்சுகளின் குட்டி
பசிக்காக,
இரவல் வேண்டி
நுழைந்தாயோ,
மழைக்காலம் துவங்கிய
மறுநாளே,
மாற்று இடம்தேடி
அலைந்தாயோ,
மனைவி சமையல்
வாசத்தாள்
வசப்பட்டு வந்தாயோ,
மகளின் சிரிப்பு
கேட்டு,
வியப்பின் உச்சத்தில்
நுழைந்தாயோ,

அந்தரத்தில் சுழன்ற
மின்விசிறியில்
அடிபட்டு வீழ்ந்தாயோ,
உயிர்போகும் நேரத்தில்
இறகு முளைக்கா
குஞ்சுகளை நினைத்தாயோ,
இனி கழுகுகள்
இரைக்காக,
உன் குஞ்சுகள்
தேடுமோ,
மண்ணில் மனிதர்களை
விட,
இயந்திரங்கள் அதிகம்
மறந்தாயோ,

அலைக் கற்றையில் மிஞ்சிய
அழிந்துபோன இனமே,
அடுத்த சந்ததிக்கு
உன் அறிமுகம் வேண்டாமா..

மன்னித்துவிடு,
உன் வருகை அறியாமல்
மின்விசிறி அணைக்காமல்,
உன் மரணைதை அழைத்துவிட்டேன்..

ஆழ்ந்த இரங்கல்...

#சிபூ
#கவிதை

எழுதியவர் : சிபூ (9-Aug-22, 9:14 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : mannithuvidu
பார்வை : 145

மேலே