நானின்றி நீ மகிழ்வாய் மாறிவிட்டாய் 555

***நானின்றி நீ மகிழ்வாய் மாறிவிட்டாய் 555 ***
உயிரானவளே...
காதல் என்னும் பாதையில்
வேதனைகளை கொடுத்து சென்றவளே...
உன் நினைவுகளை
துடைத்து செல்ல...
மண்ணில்
விழுந்த காயமல்ல...
கைக்குட்டையால்
நான் துடைத்து செல்ல...
என் நினைவுகளை
சலவை செய்து...
ஒவ்வொரு செல்லிலும் உயிர்
வாழும் உன் காதல்...
ஆயிரமாயிரம்
நட்சத்திரம் ஜொலித்தாலும்...
ஒற்றையாய் வந்து நிற்கும்
வெண்ணிலவை போல...
உன்னை மறக்க நான் ஆயிரமாயிரம்
முயற்சிகள் எடுத்தாலும்...
நிலவை போல எட்டு
திசையிலும் நீயே தெரிந்தால்...
உன்னை
நான் மறப்பது எப்படி...
நானின்றி நீ
மகிழ்வாய் மாறிவிட்டாய்...
நீயின்றி
நான்தான் தவிக்கிறேன்...
நீ
என்னுயிர் என்பதால்...
நான் உன் கைகோர்ப்பதை
நீ தடுக்கலாம்...
உன் நினைவுகளோடு
கைகோர்ப்பதை...
நீ எப்படி
தடுப்பாய் உயிரானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***