தமிழ்ப் பச்சை அல்ல

மணமாகி ஈராண்டு ஆனபின்னே
ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்.
மாமனார் பெயர் பச்சையப்பன்
அவர் பெயரில் பாதி 'பச்சை'யை
எங்கள் பையனுக்குச் சூட்டப் சொல்லி
வற்புறுத்திக் கூறினார் என் மாமியார்.

எனக்கும் என் கணவருக்கும்
எங்கள் பையனுக்குத் தமிழ்ப் பெயரை
வைக்க அணுவளவும் ஆசை இல்லை.
உலகத் தமிழர் எல்லாம் இந்திப் பெயரை
பெற்ற பிள்ளைகளுக்குச் சூட்டும்போது
நாங்கள் மட்டும் தமிழ்ப் பெயரை வைக்க
எங்களுக்குப் பைத்தியமா பிடித்துள்ளது?

எனவே பையனுக்கு 'பச்சை' என்றே பெயரிட்டோம்
நீங்கள் நினைப்பது போல் தமிழ்ப் பச்சை அல்ல
இப்பெயர் இனிய இந்திப் பெயர் 'பச்சை'
வாழ்த்துங்கள் "இந்தி 'பச்சை' ஸ்வீட் நேம்" என்று!
*******************************************************
Pachai = Youthful, Resourceful. Indian origin. Masculine name.

எழுதியவர் : மலர் (10-Aug-22, 7:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 49

மேலே