மின்னலாய் அவள்

கொடி மின்னலாய்ப் பாய்ந்து வந்த
அடியே உந்தன் பார்வை என்கண்களை
மூட செய்ய கண்விழித்தேன் நீயோ
காணவில்லை திரும்பி பார்க்கும்போது
மின்னல் உருமாறியதோ பொற்சிலையாய்
பேசும் பொற்சிலையாய் என்முன்னே
வந்து நிற்கின்றாய் எல்லாம் நொடிப்பொழுதில்
தோன்றும் மின்னல் போல மின்னலமோகினி நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-22, 10:39 am)
Tanglish : minnalaay aval
பார்வை : 149

மேலே