கசகசா - நேரிசை வெண்பா

கசகசா
நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

கிருமி நமைச்சல் கிராணியதி சாரஞ்
சிறுநீர் அநித்திரைபோஞ் செப்பில் உருஅழகுங்
காந்தியுமுண் டாகுங் கசகசா வின்குணத்தைத்
தே;ர்’ந்தவர்க்கு விந்துவுமாந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

கசகசாவால் கிருமி நமைச்சல், கிராணி, கழிச்சல், சலதோடம், தூக்கமின்மை இவை நீங்கும்; உடல் நல்ல பலமும் ஒளியும் பெறும்; விந்து பெருகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-22, 11:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே