தன்னலமற்ற அறமே தலையாய அறமாம் – அறநெறிச்சாரம் 149

நேரிசை வெண்பா

பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண் நில்லா தறஞ்செய்க - மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும் 149

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நெஞ்சே! நற்குணமிக்க செயல்களைத் தவறாமல் செய்யக் கருதினால் அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக;

அவ்வறம் இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி தாய்ப்பசு தன் பாலை யருந்தத் தன் கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால் விரைந்து வரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-22, 1:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே