சீரகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

வாந்தி யருசிகுன்மம் வாய்நோய் பிலீகமிரைப்
பேந்திருமல் கல்லடைப்பி லாஞ்சனமுட் – சே’ர்’ந்தகம்மல்
ஆசனகு டாரியெனும் அந்தக் கிரகணியும்
போசனகு டாரியுண்ணப் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

வாயுவொடு நாசிநோய் வன்பித்தஞ் சேராது
காயம் நெகிழாது கண்குளிருந் - தூயமலர்க்
காரளகப் பெண்மயிலே கைகண்ட(து) இத்தனையுஞ்
சீரகத்தை நீதினமுந் தின்

- பதார்த்த குண சிந்தாமணி

சீரகம் வாந்தி, சுவையின்மை, குன்மம், வாய் நோய், பீலிகம், இருமல், கல்லடைப்பு, ஆஞ்சனம், ஆசன குடோரி, வாதம், நாசி நோய், பித்தம் இவற்றை நீக்கி உடலிற்கு உறுதியும் கண்ணிற்குக் குளிர்ச்சியையும் உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-22, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே