சுதந்திரம் போற்றுதும் சுதந்திரம் போற்றுதும்

சுதந்திரம் போற்றுதும் சுதந்திரம் போற்றுதும்

மாந்தருக்குள் பேதங்கள் சிறிதளவு மில்லாது
மந்திமனம் கொள்ளாது சுத்தமன மது பற்றி
காந்தமென எல்லோரும் ஈர்ப்புடன் ஒன்றாக
பாந்தமாய் வாழ்வோம் அன்பத் தோழமையே

உலகத்தில் நம்நாடு சிறப்பாய் தேர்ச்சியுற
கொலையும் கொள்ளையு மில்லாத நிலையில்
நல்லறம் பேணி சீரான நோக்குடனே
தலைசிறந்து வாழ்வோம் வாழையடி வாழையாய்

( யாப்பு சாராத இயல்பு வரிகளில்)

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Aug-22, 6:44 pm)
பார்வை : 123

மேலே