கண்ணிலே நீஅன்பில் எழுதும் காதல் ஓவியம்
விண்ணிலே வானவில் எழுதும் வண்ண ஓவியம்
கண்ணில நீஅன்பில் எழுதும் காதல் ஓவியம்
கிண்ணம் ததும்பும் மதுபோல் செவ்விதழ் சித்திரம்
எண்ணிலா ஆனந்தமடி எனக்கு பார்க்கப் பார்க்க !
விண்ணிலே வானவில் லின்வண்ண ஓவியம்
கண்ணிலே நீயெழுதும் காதலின் ஓவியம்
கிண்ணம் ததும்பும் மதுவிதழ் சித்திரம்
எண்ணிலாஆ னந்தம் எனக்கு
விண்ணிலே வானவில் லின்வண்ண ஓவியம்
கண்ணிலே காதலின் ஓவியம் --பெண்ணேஉன்
கிண்ணம் ததும்பும் மதுவிதழ் சித்திரம்
எண்ணிலாஆ னந்தம் எனக்கு