கருணைபொழி போரூரா காட்டு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சும்மா இருவென,நீ சொல்ல பொருளொன்றும்
அம்மா அறிந்திலனென்(று) அன்றுரைத்த - எம்மான்
அருணகிரி நாதன் அனுபவம்,நா யேற்கு
கருணைபொழி போரூரா காட்டு!
... திருப்போரூர் சந்நதி முறை
1, 3 சீர்களில் மோனை பெறுவது பொழிப்பு மோனையாகும்.
சு விற்கு சு சூ சொ சோ
அ விற்கு அ ஆ ஐ ஔ
க விற்கு க கா கை கௌ பொழிப்பு மோனை ஆகும்.

