இதழின் இளஞ்சிவப்பில் இளநகை புரியுமுனை

கதிர்விரிந்து காலையின் கதவினைத் திறக்க
நதியலைகள் பொன்னிறத்தில் புதுமையில் விரிய
இதழின் இளஞ்சிவப்பில் இளநகை புரியுமுனை
உதய சூரியனும் மஞ்சள் நீராட்டுது !

கதிர்விரிந்து காலைக் கதவைத் திறக்க
நதியலைகள் பொன்னிற மாக விரிய
உதயத்தின் சூரியனும் மஞ்சள்நீ ராட்டும்
இதழில் இளநகைஉன் னை

கதிர்விரிந்து காலைக் கதவைத் திறக்க
நதியலைகள் பொன்னிற மாக --கதிரோன்
உதயத்தின் சூரியனும் மஞ்சள்நீ ராட்டும்
இதழில் இளநகைஉன் னை

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-22, 9:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே