தென்றல் வந்துனைத் தீண்டிடும் வேளையில் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3, 5 சீர்களில் மோனை)

தென்றல் வந்துனைத் தீண்டிடும் வேளையில்
..தேனோ;
உன்றன் மெல்லிய உடலினைத் தீண்டவே
..உவப்பில்
கன்னம் விருப்புடன் கனிந்ததோர் இன்சுவைக்
..கனியோ;
மின்னல் விழிகளில் மிளிர்ந்திடும் மேன்மையே
..மேலாம்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 3:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே