கண்ணன் எந்தன் காதலன்

கண்ணன் எந்தன் காதலன் மன்னன்
கடல்வண்ணன் அவன் என்சிந்தையைக் கவர்ந்த
எந்தன் உயிரின் உயிராம் அவன்
எந்தன் உயிர்க் காதலன் காவலன்
ivaiyagathil கண்ணனைப்போல் ஒர்க் காதலன்
கண்டவரும் உண்டோ அன்பால் கட்டி
அணைப்பான் முத்தமிடுவான் உள்ளம் உருக
உருகிடும் உள்ளத்தில் உருவம் எடுத்து
பொங்கும் பிள்ளை அழகாய் மோகனப்
புன்னகைத்த தருவான் எட்டி நான்
அவனை அணைத்து கண்ணா நீ
என்றும் எனக்குத்தான் என்று நினைக்க
எங்கோ காணாமல் போய்விடுவான் எங்கிருந்தோ
அவன் புல்லாங்குழல் ஓசை மட்டும்
மோகன ராகம் பாடி காற்றில் ஒலிக்க

ராதையோ கோதையோ பாமாவோ ருக்குமணியோ
நீயார் என்று நீ கேட்டால் எனக்கு
தெரிந்ததெல்லாம் ஒன்றே கண்ணா
நான் நான்தான் உந்தன் காதலி
உன்னை மட்டுமே என் உள்ளத்தில்
வைத்து பூஜிப்பவள் நீ என்றும்
எனக்கு மட்டும் தான் என்று
நினைப்பவள் அதனால் கண்ணா வா
மணிவண்ணா வா போதும் நீ
மறைவில் இருப்பது என்முன்
வந்து விடு என்றும் எனக்கு நீயாய்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 6:52 am)
பார்வை : 80

மேலே