பறை

மாட்டுத் தோல் கட்டி
ராவி எழுப்பும் ஓசையில்
சொல் பேச்சுக் கேட்காம
துடிக்கும் என் தசைபூரா
தாவித் தாவி ஆடுவேன்
தலை காலு புரியாம

நெனவு தெரிஞ்ச நாள்முதலா
கேலி பேசி சிரிக்கும்
ஊரே என்னைப் பார்த்து
இருந்தாலும், தாளம் தப்பாம
ஆடும் யேம் பழக்கம்
என்னை விட்டுப் பிரியல
இடுகாடு செல்லும் வரைக்கும்

சென்ற பின்னும் செரிக்கல
நான் தின்னக் சோரு
செவிட்டுப் பயபோல ஆத்தா
அழ நான்கேட்டுக் கிடந்தேன்
பாடை விட்டுப் பிரிய
மனசு இடம் கொடுக்கல

பறை அறைய ஆரம்பிச்ச
நாழிகைக் கெல்லாம் பாடையில்
இருத்தி வைக்க இயலாம
இந்த தேகம் ஆட்டம்போட
தொட்டில் பழக்கம் வந்ததய்யா
சுடுகாடு வரைக்கும்...

எழுதியவர் : கவிபாரதீ (21-Aug-22, 9:29 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : parai
பார்வை : 53

மேலே