சிதைக்கலாம் எதையும்

மயிரை வளர்த்து மழித்து மதத்தை
உயர்த்த மனிதம் கொன்று அழித்து
அயராது அதகளம் செய்யும் மனிதரால்
துயரமே என்றும் விளையுமே திண்ணம்

மரம்போல் சேவை செய்ய மனமுண்டோ
அருமை மிகுந்த மனிதர் இதயத்தில்
பெருமை பேசவே எதுவும் செய்வார்
பரிதியின் ஒளியினும் மிஞ்சவே எண்ணுவார்.

நூறாண்டு வாழவே வழியும் இல்லை
ஆறோடும் மணலையும் அள்ளி விற்று
நீறாடி இறையை பேசியே தீதாய்
மாறாடி என்றே வாழ்பவன் மனிதனாம்.

பாகல் வேப்பம் காய்கள் கசப்பு
வேகும் முன்பு சிலகாய் துவர்ப்பு
சோகக் கண்ணீர் சுவையோ உவர்ப்பு
தேகக் களைப்பை நீக்குமே இனிப்பு

அணுவால் ஆற்றல் பெருகும் பெரியதாய்
பணத்தால் சிதைக்கலாம் எதையும் பொதுவாய்
கணித்து முயன்றால் காலமெலாம் வெற்றியே
பணியில் பொறுமை பலத்தைக் கொடுக்கும்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Aug-22, 9:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

மேலே