கண்ணாடி
கண்ணாடி.
கவிதை ஒரு
கண்ணாடி ,
அதில் தெரிவது
எல்லாம்
கவிஞனின் உள்ளம்.
காதலால்
அவன் உள்ளம்
கனிந்து
இருக்கையிலே!
அதில் தெரிவது
காதல் கவிதை.
அநீதியைக் கண்டு
அவன் உள்ளம்
குமுறும் போது!
அதில் தெரிவது
புரட்சிக் கவிதை.
இறைவன்
அருள் வேண்டி
அவன் உள்ளம்
உருகையிலே!
அதில் தெரிவது
பக்தி பாடல்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.