தமிழ் இன்பக் கடல்

இன்பக் கடலில் ஆழ்த்தும் தமிழே !
⚘⚘⚘⚘⚘⚘⚘

இன்பக் கடலில் ஆழ்த்தும் தமிழே //
அன்பர் மனதில் ஆளும் அழகே //

பேசும் மொழியில் பிறந்த உயிரே //
வீசும் காற்றில் விளைந்த பயிரே //

இயலில் இசையில் இனித்தாய்க் கூத்தில் //
அயலும் வியக்க அறிவியல் ஏற்றாய் //

பழையன கழித்துப் புதியன போற்றி //
வழுவினை அகற்றி வளர்ச்சியைக் கண்டாய் //

அன்பினை அறத்தினை அருளொடு புகட்டி //
இன்ப வாழ்வினை எமக்கே அளித்தாய் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (24-Aug-22, 9:52 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 1408

மேலே