குடிப்பழக்கம் நாளுமே கொண்டிடில் கொல்லுமே போதை - கலித்துறை

கலித்துறை
கருவிளங்காய் விளம் விளம் விளம் தேமா)

குடிப்பழக்கம் நாளுமே கொண்டிடில்
..கொல்லுமே போதை;
தடித்தவுன்றன் பழக்கமும் தானுனை
..மாய்த்திடு மன்றோ?
இடங்கொடுத்தே இடர்ப்படல் இன்னலை
..நல்கிடுஞ் சொன்னேன்;
அடுக்கடுக்காய்த் துயர்தரும் அதனையே
..நீக்கிடில் நன்றே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-22, 8:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே