புதிய சுதந்திர தாகம்
அன்று வெள்ளையன் ஆட்சி நம்
சுதந்திரம் பறிபோனது
கொத்தடிமையாய் நாம் ;
அந்தோ என்ன கொடுமை
அன்று அடிமையைக் கொண்டே
அடிமையை வதைத்தான் வெள்ளையன்
அடிமையே குதிரையின் மீது அமர்ந்த
வெள்ளையனின் மைக்காவலனாய் வந்து
தரையில் நீதி கேட்ட அடிமையை தாக்கினான்
நீதி தட்டி கேட்ட பாளையக்காரரும் சிற்றரசரும் கூட
மண்ணில் வீழ்ந்தார் சிலர் தூக்கிலிடப்பட்டார்
இந்த கொடுமைகளை அடிமைக் கூலி
ஆளும் கொடுங்கோலனுக்கு செய்து முடித்தான்
எல்லாம் கூலிக்காக
எட்டையப்பர் நாட்டில் எங்கும்
நாட்டைப் பிடுங்கி நம்மை நாற்றத்தில் விட்ட
வெள்ளையனுக்கு பக்க வாத்தியம் வாசித்து
சிலர் செல்வந்தர் ஆன கதையும் ஏராளம்
ஆனாலும் சுதந்திர தாகம் பெரும் மக்களுக்கு
தியாகிகள் உருவானார்
தங்கள் திரவியங்களை எல்லாம் துறந்தார்
நாட்டிற்காகவே உயிர் மூச்சு என்று
போராடி .........எப்படியோ
ஒரு வழியாய் பறிபோன சுதந்திரம்
நாட்டிற்கு கிடைத்தது ....
இன்று : சுதந்திர நாடு ......நம் நாடு
இன்னும் கூலிப் படையினர்
பரவி இருக்கின்றார்....
வலியோர் ....செல்வந்தர்.....
எளியோரை எளியோரைக் கொண்டே தாக்கி
எளிதாய் தாம் வேண்டியதை
அடைந்து விடுகின்றார் ....
வீடு போகிறது....காணி நிலம் போகிறது
அழகு பிள்ளைகள் கற்பு பறிபோகிறது
தட்டி கேட்டால் அடி உதை குத்து கொலை
இத்தனையும் ......கூலிப் படை வேலை
கூலிப் படை....கூலிக்காக மாரடிக்கும்
இவர்கள்...jQuery17105930149506278715_1662246097373??? இல்லாதவர்களே !!!!
இல்லாதவரைக் கொண்டு இல்லாதவரிடம்
இருக்கும் கொஞ்சன் நெஞ்சமும் பறிபோகுது
எளியோரைத்தாக்கி வலியோர் வாழ்கின்றார்
இன்றும்......
இது வோர் புதிய சுதந்திர தாகம்....
இன்று.....மக்கள் வேண்டுவது
நேர்மை, உண்மை
எளிமையிலும் நிறை வாழ்வு
பூரண சுதந்திரம்
யார் தருவார் ...
என்று தணியும் இந்த புதிய
சுதந்திர தாகம்......