அரங்கத்தில் பள்ளிகொண்டுள்ளான் கண்களை பார்

எப்போதும் என்மீது மையல் கொண்டு
என் முகம் என்கண்கள் என்று இவற்றையே
கதியென்று எண்ணி பித்தாய் அலையும்நீ
கொஞ்சம் கண்ணனின் கார்மேக வண்ணனின்
தாமரைக் கண்களைப்பார் தாமரை முகத்தை
அரங்கத்தில் பைந்நாகம் மேல் பள்ளிகொண்டுள்ள
அந்தப் பேர் எழிலை கண்ணனை அரங்கனை
பார்த்து மனதில் இருத்தி சிந்தித்தாய்
எனில் மீண்டும் இந்த அற்பமனிதப்
பிறவியின் மேல்நீவைத்த காதலை
முற்றும் துறந்து கண்ணன் பாதமே
கதி என்றிருப்பாய் என்றாள் அந்த
கோயில் நடனமாது அவன்மனம் மாற

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Sep-22, 8:58 am)
பார்வை : 36

மேலே