அல்லியாய் அந்திப் பொழுதாய் வந்தாய்நீ

மல்லிகைப் பந்தலில் மார்கழிப் பனித்துளி
மெல்லிய வானவில் கோடுகள் மேற்குவானில்
சொல்லிலா மௌனப் புன்னகை ஏந்தி
அல்லியாய் அந்திப் பொழுதாய் வந்தாய்நீ
----கலிவிருத்தம்

வேறு வடிவில் முற்றிலும் விளச் சீரால்
அமைக்கப் பட்ட கலிவிருத்தம் யாப்பார்வலர் காண்க

மல்லிகைப் பந்தலில் மார்கழிப் பனித்துளி
மெல்லிய வானவில் கோடுகள் மேற்கினில்
சொல்லிலா மென்மௌனப் புன்னகை ஏந்திநீ
அல்லியாய் அந்திமென் பொழுதுபோல் வந்தனை

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-22, 11:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே