சீலை கம்பளம் மயிலிறகு இவற்றின் சாம்பல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அஸ்திபிர மேகம்போம் ஆடைசுட்ட சாம்பலுக்குத்
தத்திவரு ரத்தந் தடைபடுங்காண் - சத்தியமாய்க்
கம்பளச் சாம்ப(ல்)சன்னி காது(ம்)மஞ்ஞைத் தோகைபஸ்பம்
கும்புவிக்கல் வாந்திகெடுக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

சீலைச் சாம்பலுக்கு என்புருக்கியும் கீறி இரத்தமும் போகும் . கம்பளச் சாம்பல் சன்னியையும் மயிலிறகுச் சாம்பல் , விக்கல் வாந்தியையும் நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-22, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே