அறிவிலார்க்குரிய ஐந்தும், அறிவுடையார்க்குரிய ஐந்தும் – அறநெறிச்சாரம் 173

நேரிசை வெண்பா

தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப்(பு) அழுக்காறென்(று)
ஐந்தே கெடுவார்க்(கு) இயல்பென்ப - பண்பாளா!
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொற்கற்(று)
ஆய்தல் அறிவார் தொழில் 173

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நற்குணமுடையாய்! பெரியோர்களைப் பணியாமைக்கும், செய்யத் தகுவனவற்றைச் செய்யாமைக்கும் காரணமாகிய) நன்மையின் நீங்கிய மானமும், பொய்யே பேசுதலும், கோபித்தலும், மறத்தலும், பொறாமையும் என்று சொல்லப்படுகிற ஐந்தும் அழிகின்றவர்களுக்கு உரிய குணங்களாகும் எனவும்,

இரப்பவர் குறிப்பறிந்து ஈதலும், நல்லனவற்றை ஆராய்ந்தறிதலும், அறிந்தவற்றைச் சோர்வின்றிச் செய்தலும், யாவர்மாட்டும் இன்சொல் சொல்லுதலும், அறிவு நூல்களைக் கற்று ஆராய்தலுமாகிய இவ்வைந்தும் அறிவுடையோர் தொழில்களாகுமெனவுங் கூறுவர் பெரியோர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-22, 7:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே