காவியச் சோலையில் கம்பனுடன்

கம்பனின் விருத்தப்பா

எண்ணரு நலத்தினாள் இளையன் நின்றுழிக்
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றியொன்
றுண்ணவும் நிலைபெறா துணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

இலக்கியம் :
----இந்தப் பாடல் மிகவும் பிரபலமானது இலக்கியம் படித்த அனைவரும் படித்திருப்பார்கள்
இது ராமன் சீதை இருவரும் விழிகளால் சந்தித்துக் கொண்ட முதல் காதலைப் பேசும் வரிகள்
காதலர்கள் விழியால் பேசியதை கம்பன் தன் சொல்லால் பேசுகிறான் தன் சொல்லாடலால்
இலக்கிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறான்
இவள் விழி நல்கிய வீரத்தால் ராமன் முறிக்க வேண்டிய போட்டி வில்லை "ஏடவிழ் மாலையென" மிக எளிதாக எடுத்து "எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்" என்ற விரைவில் முறித்ததை வேறு
பாடல்களில் மிக அழகாகச் சொல்வான் .

இலக்கணம் :
இந்தப் பாடல் கலிவிருத்தம் எனும் பாவினத்தில் அமைக்கப் பெற்றுள்ளது பொதுவாக
கம்பனின் இராமாயண பாடல்கள் அனைத்தும் கலிவிருத்தம் ஆசிரிய விருத்தத்தில்
அமைந்தவை. கம்பனின் கற்பனை வளம் சொல்லாடல் தமிழ் இனிமையால்
விருத்தத்திற்கோர் கம்பன் என்ற பெயர் பெற்றான்
கலிவிருத்தம் கலிப்பாவின் ஒரு பாவினம்
இதன் அடிப்படை இலக்கணம் ஒரே எதுகை (எண் கண் றுண் அண் )
நாலு சீர் நாலடிகள் அவ்வளவே . வெண்பாபோல் தளைவிதிகள்
இப்பாவினதைக் கட்டுப் படுத்தாது . ஆதலால் எளிது [

விளம் விளம் மா விளம்
என்ற வாய்ப்பாடு அமைய புனையப்பட்டுள்ளது

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

----நாலடி நாலுசீர் வர்க்க ஒரே எதுகையில் அமைந்த கலிவிருத்தமே
மா விளம் விளம் விளம் வாய்ப்பாடில் அமைந்துள்ளது

கூற்றம் இல்லையோர் குற்றமி லாமையால்
சீற்றம் இல்லைதம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்ல திலாமையால்
ஏற்றம் அல்ல திழித்தக வில்லையே

----இதுவும் கலிவிருத்தமே
மா விளம் விளம் விளம் வாய்ப்பாடு முதலடி இரண்டாம் அடியில்
அமைந்துள்ளது
மூன்றாம் அடியில் மா விளம் மா விளம் என்றும்
நான்காம் அடியில் மா மா விளம் விளம் என்றும் அமைந்து
வந்த கலிவிருத்தம்
கம்பனை இலக்கிய இலக்கண அழகில் மேலும் காண்போம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-22, 5:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே