நவராத்திரி

நவராத்திரி

அழகுள்ள பலவகைப் படிகளை வீட்டில் கட்டி அமைத்து
அலங்கார தோரணங்களை அதில் சுற்றி ஒட்டி வைத்து
ஆடும் தீபங்களையும் நிலையான பொம்மைகளையும்
ஆடைகள் உடுத்தி வைத்த மரபாச்சி பொம்மைகளையும்
இறைவன் தோன்றிய பலவித அவதார பொம்மைகளையும்
ஈசன் வடிவத்தை வர்ண பொம்மைகளாக்கி அவைகளையும்
உலக நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சில பொம்மைகளையும்
ஊருக்கு உபதேசம் செய்த மகான்களின் பொம்மைகளையும்
எதிலும் இறைவனைக் கண்ட அடியார்களின் பொம்மைகளையும்
ஏற்றம் மிக்க பல நீதிக் கதைகளை கூறும் பொம்மைகளையும்
ஒன்றாக அடுக்கி வைத்து அருமையான பொம்மை கொலுவாக்கி
ஓதும் மந்திரங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிக் கொண்டு
முப்பெரும் சக்திகளை மனதினால் வணங்கி அவள் அருள் பெற
அக்கம் பக்கம் உள்ள சுற்றத்தையும் நண்பர்களையும் அழைத்து
கூடிக் கொண்டாடும் ஒன்பது இரவுகளை நவராத்திரி என அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (28-Sep-22, 5:13 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 72

மேலே