சிந்தனைக் கவிதை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கவர்ச்சி நடிகை
நகைக்கடையை
திறந்தார் என்பது
தலைப்புச் செய்தியாகவும்...
தமிழ் மாணவி
தண்ணீரில் ஓடும்
வண்டியை
கண்டுபிடித்தார் என்பதை
கடைசி பக்கத்தில்
பெட்டி செய்தியாகவும்
போடுவதிலிருந்து
தெரிகிறது
நமது நாட்டு பத்திரிக்கையின்
நாட்டுப்பற்றும் ?
நோட்டு பற்றும் ?

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

ராஜராஜ சோழன்
இன்று இருந்திருந்தால்...
ஆலயங்களை
கட்டி இருக்க மாட்டான்...
ஆஸ்பத்திரிகள் தான்
கட்டியிருப்பான்....
மக்கள்
மதங்களின் பெயரால்
அடித்துக் கொண்டு
வெட்டிக் கொண்டு
குத்திக் கொண்டு
வருகின்றவர்களுக்கு
சிகிச்சை அளிப்பதற்காக...!!!

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

இன்று
கர்ணன் இருந்தாலும்....
சலித்து போய்
தர்மம் செய்வதையே
வெறுத்து விடுவான்.....
என் நாட்டு மக்கள்
இலவசங்களுக்காக
கையேந்தி
நீண்ட வரிசையில்
நிற்பதை பார்த்து.......!!!

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

அன்று
என் கிராமத்தில்
போடப்பட்ட
தார் சாலையை
மழை விட்ட
பெரு நீர் தான்
அடித்துச் செல்லும்....
ஐயோ !
இது என்ன ?
இன்று
என் தெரு
மழலைகள் விட்ட
சிறுநீரே !
அடித்துச் செல்கிறதே...!

*கவிதை ரசிகன் குமரேசன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Sep-22, 8:24 pm)
பார்வை : 119

மேலே