பாதரசம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விழிநோய் கிரந்திகுன்மம் மெய்ச்சூலை புண்குட்
டழிகால்இல் விந்துவினால் அத்தை - வழியாப்
புரியு(ம்)விதி யாதும் புரியினோ யெல்லாம்
இரியு(ம்)விதி யாது மிலை

- பதார்த்த குண சிந்தாமணி

பாதரசத்தை முறைப்படி சுத்தி செய்து பயன்படுத்தினால் கண்ணோய், கிரந்தி, குன்மம், கீல்பிடிப்பு, புண், குட்டம், விந்துநட்டம் முதலான நோய்கள் விலக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-22, 11:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே