மெத்திலி எங்க

மெத்திலி புள்ள எங்கடி போயிட்டா?
@@@@
அம்மா உங்க பேத்தி பேரு 'மெத்லி'. மெத்திலி இல்ல.
@@@@
நான் மெத்திலினு தான்டி சொன்னேன்.
@@@@
இந்திப் பேரு. உன்னால சரியா உச்சரிக்க முடியல.
@@@@@
சரி. நெத்திலி மீனை என்னன்னு சொல்லறோம்.

உம் பொண்ணுப் பேரைச் சொன்னா மாதிரி நெத்திலி யைப் சொல்லு பாக்கலாம்.
@@@@@
'நெத்லி'னா நல்லா இருக்குதாம் மா?
@@@@@@
உனக்கு இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாய் பொறந்தா அந்தக் குழந்தைக்கு 'நெத்திலி' (நெத்லி)னு பேரு வச்சிருடி. இந்தி நெத்திலினு சொல்லுடி. நம்ம மக்கள் "நெத்திலி சுவீட்டு நேமு"னு சொல்லுவாங்கடி.
@@@@@
போம்மா. உனக்கு கிண்டலாப் போச்சு. என் கணவருக்கே நான் எங்க குழந்தைக்கு வச்ச 'நெத்லி' பேரு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நீ எங்க பொண்ணும் பேரைக் கிண்டல் பண்ணாதம்மா.
#@@@@@@@
நல்லாப் பேரு வச்சீங்கடி. மெத்திலியாம் மெத்திலி

எழுதியவர் : மலர் (29-Sep-22, 6:58 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 36

மேலே