பாதரச தோஷம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[மா + மா + காய் அரையடிக்கு]

கலையைக் கிழிக்கும் அவிழ்த்தெறியுங்
..கல்லைத் தேடி யெடுத்தெறியும்
மலையிற் குதிக்கும் புனல்மூழ்கும்
..மருள்சேர் பித்தந் தனைக்கொடுக்கும்
உலையின் அனல்போல் உடல்வெதுப்பும்
..ஓயா உழலை வியர்வாக்கும்
பலகா லமுமே வாய்பிதற்றும்
..பாத ரசதோ ஷமுமிஃதே!

- பதார்த்த குண சிந்தாமணி

இதனைச் சுத்தி செய்யாமல் பயன்படுத்தினால் துணியைக் கிழித்தல், அவற்றை அவிழ்த்தெறிதல், கல்லாலடித்தல், மேலிருந்து குதித்தல், தண்ணீரில் மூழ்கி மூழ்கிக் கிளம்பல், மயங்கி பித்து கொள்ளல், உடல் வெதும்பல், வாய் நீருறல், வேர்வை விடுதல், வாய்பிதற்றல் ஆகிய குணங்கள் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 7:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே