எண்வகைத் தோஷம் நீங்காத பாதரசம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ச'ர்'ப்ப(ம்)வங்கங் கந்திவன்னி சஞ்சலம்ம லங்காளம்
ஒப்பி(ன்)மந்தம் எண்தோஷம் ஒட்டிரதத் - தைப்புசியார்
கொப்புளங்குட் டங்கியெரி கோதுவிந்தி ளைப்பிறத்தல்
அப்புளமூர்ச் சைக்குமுரி யார்

- பதார்த்த குண சிந்தாமணி

சர்ப்பம், வங்கம், சன்னி, வன்னி , சஞ்சலம், மலம், காளம், மந்தம் ஆகிய எண்வகை தோடங்களையும் நீக்காமல் பாதரசத்தை உண்டால் முறையே இரணம், பெருநோய், தீச்சுவாலை, தவிப்பு, இரத்த சோகை, வீரிய நட்டம், மரணம், சோபம் என்ற எட்டு வகை நோய்களையும் பெறுவார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 8:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே