தெய்வ மலர்

தெய்வ மலர்.

அன்பு,
வேதனைக்கு
அருமருந்து.

அன்பு,
பெற்றவளின்
முகத்தில்
மலர்ந்திருக்கும்
பாச மலர்.

அன்பு,
அன்புடையாள்
கண்களில்
தெரியும்
ஒளி விளக்கு.

அன்பு,
அன்னை மடியில்,
நிறைந்திருக்கும்
தெய்வ மலர்.

அதில் ஒன்றை
நீ எடுத்து,
உன் காதில்
சொருகி விடு!

கேட்பாய்! 🎼🎵🎶
"அன்புடையார்
உடையார் எல்லாம்,
அன்பற்றார் இருந்தும்
இல்லார்"
என்ற அன்னையின்
அருள்மொழி.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Sep-22, 8:41 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : deiva malar
பார்வை : 59

மேலே