மூவகை ஈகை - அறநெறிச்சாரம் 176

நேரிசை வெண்பா

அடங்கினார்க்(கு) ஈதல் தலையே அடங்கா(து)
அடங்கினார்க்(கு) ஈதல் இடையே - நுடங்கிடையாய்!
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃதென்ப
தோற்பாவைக் கூத்தினுள் போர் 176

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

துவளுகின்ற இடையினையுடைய பெண்ணே! கொடுப்போர் பணிவுடன், மனம் பொறிவழி போகாது அடங்கினவர்களுக்கு உண்டி முதலியன உதவுதல் தலையாய அறம்;

அங்ஙனம் அவர் பணியாது அடங்கினவர்களுக்கு ஈவது இடையாய அறம்;

தானும் அடங்காது அடங்காதவனுக்கு ஈயின் அந்த ஈகை நாடக மேடையில் தோலாற் செய்த பொம்மைகள் ஒன்றோடொன்று போர்புரிதலை யொக்கும் என்று கூறுவர் பெரியோர்.

குறிப்பு:

அடங்காதார் அடங்காதார்க் கீதல் கடை என்ப; இது தோற்பாவைப் போர் எனப்பட்டது;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 7:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே