மீண்டு மீண்டும்

மீண்டு(ம்) வரக் கூடாதென பலர்
காட்டும் தீவிரத்தில்
கடந்த பாதையும்
கடக்கப் போகும் பாதையும்
கண்முன் விரிகிறது!

துயர் என்னை அண்டுதில்லை
அண்ட நான் அனுமதிப்பதுமில்லை.
கண் முன்
நிகழ்ந்த அநீதியும்
அதற்கான
உன் பொருந்தன்மையுமே
நெகிழ்த்துகிறது.

இருந்தும் இழப்பை
கொண்டாடுபவர்கள் பற்றி
அலட்டிக் கொள்வதில்லை நான்.

பிறந்தவர் இறக்க வேண்டுமென்பது உலக நியதி.
வாழும் போதே இறந்திறந்து
வாழ்ந்தவன் உடலிறப்பு
உன்னை…
என்னை…
உன்மேற் கொண்ட என் அன்பை…
என்ன செய்து விடமுடியும்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (4-Oct-22, 4:35 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : meentu meentuம்
பார்வை : 125

மேலே