எங்க கஞ்சியைக் காணோம்

எங்க கஞ்சியைக் காலைல இருந்து காணோம். யாராவது பாத்தீங்களா? பாட்டி நீங்களாவது எங்க கஞ்சியைப் பாத்தீங்களா?
@@@@
என்னடி அநியாயமா இருக்குது? உங்க வீட்டில வடிச்ச கஞ்சியை யாரு எடுத்துக் குடிச்சாங்களோ? கஞ்சிக்கு காலு கையு மொளச்சுத் தெருத் தெருவா சுத்துதுன்னா பாக்கிறவங்ககிட்ட எல்லாம் "கஞ்சியைப் பாத்தீங்களா? எங்க கஞ்சியைப் பாத்தீங்களா?"னு கேட்டுட்டு திரியற? என்ன பைத்தியகாரிடீ நீ?
@@@@@
ஐயோ பாட்டி என் வேதனையைப் புரிஞ்சுக்காம என் மேல் கோவப்படறீங்களே. எங்க பையன் பேரு (Kanji) 'கஞ்சி'.

@@@@@@
என்னடி உங்களுக்கு வேற பேரே கெடைக்கிலயா? பெத்த பிள்ளைக்கு 'கஞ்சி'னு பேரு வச்சுக் கேவலப்படுத்தீட்டீங்களே? இது பைத்தியக்காரத்தனம்டி.
@@@@@@
பாட்டி இது தமிழ்க் 'கஞ்சி' இல்ல. இந்திக் 'கஞ்சி'.
@@@@@@@
அரசியைப் பொங்கி தமிழச்சி வடிச்சாலும் கஞசி தான். இந்திக்காரி வடிச்சாலும் கஞ்சி கஞ்சி தான்.
@@@@@@
எங்க ஒரே பையன். மூணு வயசு. அவன் பேரு தான் 'கஞ்சி'. சாமி பேரு.
@@@@@#@
ஓ... அப்பிடியா. இதைப் பத்தி இனிமே பேசறது சாமி குத்தம் ஆகிடும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kanji = Lord Krishna.

எழுதியவர் : மலர் (4-Oct-22, 12:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 62

மேலே