ஒன்று

கைக்கெட்டிய தூரத்தில் மகிழ்விருந்தது.
அடர் ஆழத்தில் துயராழ்ந்திருந்தது.
இரண்டென எண்ணிய
தருணத்தில்.

ஒன்றென உணர் தருணமிது.

கைக்கெட்டிய மகிழ்வுமில்லை.
ஆழ் துயருமில்லை.
இருக்கிறோம்…
வியாபித்து…
எங்கும்…
நாம்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (7-Oct-22, 10:29 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 63

மேலே