தொலை தெரி நிலா - கலித்துறை

கலித்துறை

தொலை தெரி நிலா கென்ன தொடர்
அலை கூந் அழ நீல விழி
சிலை அசைந் விதழ் தால் முத்
விலை முத் புன் இதோ கவி!

ஒவ்வொரு வரிக்கும் ஓரெழுத்து வீதமாக இடைவிட்டு ஐந்தெழுத்தும்,
நான்கு வரியும் இருந்தால் அவலோகிதம் ’கலித்துறை’ என்றே காட்டுகிறது.
இதை நம்பி, தான் எழுதுவதே சரியென்று தவறான எண்ணம் கூடாது.

’கலித்துறையில் பல வகைகள் உண்டு. அதனதன் இலக்கண வழிகாட்டுதல்படி எழுதினால்தான் பாடல் சிறக்கும். தந்தம் விருப்பப்படி கண்டபடி எழுதினால் நகைப்பிற்கே இடமாகும்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

நொந்தா வொண்சுட ரேநுனை யேநினைந் திருந்தேன்
வந்தாய் போயறி யாய்மன மேபுகுந் துநின்ற
சிந்தாய் எந்தைபி ரான்திரு மேற்றளி உறையும்
எந்தாய் உன்னையல் லால்இனி ஏத்தமாட் டேனே 1

- 21 திருக்கச்சிமேற்றளி, ஏழாம் திருமுறை, சுந்தரர் தேவாரம்

கலித்துறை
(மா மா மா மா காய்)

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே 1

- 060 திருப்பாசூர், இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

காப்பியக் கலித்துறை

முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறு
நன்றே நினைந்தான் குணமேமொழித் தான்ற னக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறு திக்கு ழந்தான்
அன்றே யிறைவ னவன்றாள்சர ணாங்க ளன்றே 1

- கடவுள் வாழ்த்து, குண்டலகேசி

அபிராமி அந்தாதி
ஆண்மகப்பேறு அடைய..!
கட்டளைக் கலித்துறை

ககனமும், வானும், புவனமும் காணவிற் காமனங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன் றோ?வல்லி, நீசெய்த வல்லபமே! 65

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-22, 5:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே