இந்தி வேண்டவே வேண்டாம் போடா கவிஞர் இராஇரவி

இந்தி வேண்டவே வேண்டாம் போடா!

கவிஞர் இரா.இரவி

மந்தி மொழி இந்தி எமக்கு வேண்டாம் போடா!
மந்த மொழி இந்தி எமக்கு வேண்டாம் போடா!

இந்தி தேவை எனில் கற்க வழி பல உண்டு!
இந்தியை அவசியம் படிக்க அவசியம் எழவில்லையடா!

இந்தி படித்தால் வேலை கிடைக்குமென்பது மூடநம்பிக்கை!
இந்தி தெரிந்தவன் பானி பூரி விற்று தமிழ் பேசுகிறான்!

தமிழ்மொழி தான் வடவனுக்கு வாழ்வாதாரம் ஆனதடா!
தமிழும் ஆங்கிலமும் இருமொழி எமக்கு போதுமடா!

உலகம் முழுவதும் பேசப்படும் மொழி தமிழடா!
உலகில் தமிழன் இல்லாத நாடில்லை போடா!

உலகமொழி ஆங்கிலமும் அருமையாக அறிவோமடா!
ஒன்றுக்கும் பயன்படாத இந்தி ஒருபோதும் வேண்டாமடா!

கட்டாயப்படுத்தி இந்தி கற்பிக்க முயற்சி செய்தால்!
கட்டாயம் இந்தி மீது வெறுப்புணர்வே மிஞ்சுமடா!

கட்டாயப்படுத்தினால் ஏற்க மாட்டோம் போடா!
கட்டாயம் இந்திமொழி தேவை எமக்கு எழவில்லையடா!

வடஇந்தியனும் இப்போது தமிழ் கற்று விட்டானடா!
வடவனிடமும் நாங்கள் தமிழிலேயே பேசுவோமடா!

இந்தியை திணிக்க முயன்ற போதெல்லாம் தோல்வி தானடா!
இந்தித் திணிப்பில் என்றும் உமக்கு வெற்றி இல்லையடா!

நீரு பூத்த நெருப்பாக இந்தி வெறுப்பு உள்ளதடா!
நீ இந்தியை திணிக்கும் கனவு என்றும் பலிக்காதடா !

இந்தி கற்றதனால் பலரின் தாய்மொழி இறந்ததடா!
இந்தி எனும் கொடிய நஞ்சு தமிழருக்கு வேண்டவே வேண்டாம்!

வீண் முயற்சி செய்து நேர விரையம் செய்யாது!
வெட்டி வேலையாம் இந்தி திணிப்பை விட்டு விடடா!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (20-Oct-22, 2:22 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 36

மேலே