மோனா லிசாபோல் நீ மோனை லிசாவோ

குறையும் கால்நீ காண்பாய் குறையிலாநிலா
நிறைவில் நினைவில் நிற்கும் நெஞ்சநிலா
மறையின் மதிவானில் முழுதும் முழுஇருள்
நிறைநிலா நீயும் நித்தம் நின்றுகாண்

----இப்பொழுது பார்த்ததும் தெற்றென தெரியும் மோனையுடன்
எல்லா அடிகளிலும் முற்று மோனை வரும்படி
மாற்றி வடிவமைத்திருக்கிறேன்

1 .கு கா கா கு
2 நி நி நி நெ
3. ம ம மு மு
4 நி நீ நி நி

--இக்குறிப்புகள் யாப்பில் பயில்வோர் ஆர்வலர்களுக்கு மட்டுமே
பொதுவாக கவிதை படிப்போருக்கு இதன் இலக்கண அடையாளங்கள் தேவையில்லை அழகியல் வரிகளாக
ரசிக்கவும்

-----------------------------------------------------------------------------------------------------------
மோனை வினாக்களுக்கு உள்ளான முந்தையப் பதிவு
மேலே முற்று மோனை தெற்றெனத் தெரியும்
மாறிய வடிவம்

குறையும் போதினில் காண்பாய் பிறைநிலா
நிறைவில் நினைவில் நிற்கும் நெஞ்சநிலா
மறையின் வானில் முழுதும் முழுஇருள்
நிறைநிலா போன்றநீ காணடி கண்மணி

---குறை நிறை மறை பிறை என்ற ஒரே அடி எதுகை
அமைந்து எல்லா அடிகளிலும் முற்று மோனை அமைந்து
எழில் கூட்டுவதை காணவும்
அடியின் அனைத்துச் சீர்களிலும் மோனை அமையின்
அது முற்று மோனை

----கவி சகோ பழனி ராஜர் சுட்டியபடி
ஈற்றடி முற்று மோனையுடன் அமையவில்லை
மற்ற அடிகளிலும் அமைந்திருப்பது முற்று மோனையா
என்பது அவரது கேள்வி இன வர்க்க மோனை வழி
அவற்றை முற்று மோனையாக கொள்ளலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-22, 4:25 pm)
பார்வை : 57

மேலே