காதலெனுஞ் சோலையிலே கண்டெடித்த பூமலரே - கலித்துறை

கலித்துறை
(கூவிளங்காய் 4 கூவிளங்கனி)
(1, 3, 5 சீர்களில் மோனை)

காதலெனுஞ் சோலையிலே கண்டெடித்த பூமலரே
..கண்களுக்கினி
ஆதிசத்தி யானவளே அன்புநிறை பெட்டகமே
..அன்புமயிலே!
ஆதிபரம் நீயெனக்கே ஐயமிலை பெண்ணவளே
..ஆங்குனதுதாள்
வேதவித்தாய் நீயிருப்பாய் வேண்டுவரம் நல்குவயே
..வேதமுதலே!

– வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:

கலித்துறை
(கூவிளங்காய் 4 கூவிளங்கனி)

வாளவரி கோளபுலி கீளதுரி தாளி(ன்)மிசை
..நாளுமகி(ழ்)வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி
..றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர்
..தூளிவள(ர்)பொன்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி தாளகயி
..லாயமலையே! 1

- 068 திருக்கயிலாயம், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-22, 1:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே