அவன் வேறு மாதிரி

சுந்தரேசனுக்கு போதும் போதும்
இந்த வாழ்க்கை என்றாகிவிட்டது.
இருக்காதா பின்னே! வாழ்க்கையில்
போராடலாம். வாழ்க்கையே
போராட்டம் என்றால் என்னாவது?
பிறந்ததிலிருந்தே கஷ்டம்தான்.
ஏழ்மையான பெரிய குடும்பம்...
ஒரு வழியா தன்னோட கடமையை
முடிச்சிட்டு தன் குடும்ப வாழ்க்கையை தொடங்கும்போது
கொஞ்சம் வயது ஆகிட்டது..
லேட் மேரேஜ். அன்பானவளாக மட்டுமில்லாமல் பொறுப்பாகவும்
பொறுமையாகவும் வந்து வாய்த்தாள்....அவன் மனைவி..பத்மா.
அளவான குடும்பம். மூத்தவள்
மதுமதி பி.இ முடிச்சு மூன்று வரு ஷம்மாச்சு கொரானா காலத்தில்
வேலைக்காக வெளியில் அனுப்ப
மனமில்லை. நல்ல புத்திசாலி.
இரண்டாவது பையன்...முகிலன்
டிகிரி செகண்ட் இயர்..
கதைக்கு வருவோம்....

என்னங்க.. எந்த தைரியத்தில்
மாப்பிள்ளை வீட்டார் கிட்ட சரி
சொன்னீங்க..இன்னும் இரண்டு
மாதம்தான் இருக்கு..

இதோ பார் பத்மா...நம்ம பொண்ணுக்கு வயசு இருபத்தாறு ஆச்சு...இப்ப முடிக்லைனா எப்ப...
எல்லாம் யோசிச்சிட்டேன்..
இன்னும் இரண்டு மாசத்தில
நான் ரிடையர்டு ஆகிடுவேன்..
கிடைக்கிற பணத்தில வாங்கின
கடன் போக நம்ம பொண்ணுக்கு
நகை அப்புறம் சீர் சாமான்லாம் வாங்கி
கல்யாணத்தை சிறப்பா நடத்திடலாம்.
மாப்பிள்ளை பிரபஞ்சன் இந்தக்
காலத்திலேயும் இப்படி ஒரு பையனாங்கிற மாதிரி சிம்பிளா
யதார்த்தமா இருக்கார். நம்ம
பொண்ணை அவருக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு..கவலைப்படாம
போய் வேலையைப்பார்....

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்
சுந்தரேசன்...
பிஎப்..கிராசுவிட்டி அப்புறம் லீவ்
என்கேஷ்மெண்ட் வரும்..
இப்படியா மனக்கணக்கு போட்டபடியே நம்பிக்கையோடு
உறங்கிப்போனான்...

இப்படியே வாரங்கள் கடந்தது...
ஒரு நாள் மாலை...
சுந்தரேசன் சேர்ல உட்கார்ந்தபடி
பத்மா கொடுத்த காபியை சாப்பிட்ட
படியே டி.வியை நோட்டமிட்டான்.
சன் செய்திகளில் முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது.
அரசு ஊழியர் ஓய்வு வயது பற்றி
முக்கிய முடிவுகள்...இரண்டு நாட்களில் வெளியாகும்....

சுந்தரேசனுக்கு லேசாக வியர்க்கத்தொடங்கியது..
வெளிக்காட்டாமல் எழுந்து போர்ட்டிகோ பக்கம் வந்தான்.
என்னவா இருக்கும் குழம்பிப் தான்
போனான்.யாரைக்கேட்பது...

மறுநாள் தோட்டத்துக்கு தண்ணீர்
விட்டபடி பக்கத்துவீட்டுக்காரர்
சுந்தரேசனைப்பார்த்து ...
கங்கிராஜுலேசன்ஸ் சார்..
ரிடையர்டுமெண்ட் ஏஜை ஐம்பத்து எட்டிலேர்ந்து அறுபது ஆக்கிட்டாங்க
சார்..காலைலே பஸ்ட் நியுஸே அதான்..ம்..ம்.. கொடுத்து வச்சவங்க
சார்..
சுந்தரேசனுக்கு தலை சுற்றியது..
அய்யய்யோ ...அப்ப பொண்ணு கல்யாணம் என்றவாறு மயக்கமுற்றான்.

அப்பா ஆஆஆஆ .....என்றவாறு
மதுமிதா பத்மாவோடு வந்தாள்.
முகத்தில் தண்ணீர் தெழிச்சிவிட்டு
என்னங்க.. என்னாச்சு...பயந்தவாறு
கேட்டாள் பத்மா.
சுந்தரரேசன் நிதானமாகச் சொன்னான்.
இப்ப என்னங்க பண்றது...
என் நம்பிக்கையே போயிடுச்சு
பத்மா.
கல்யாணத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
மாப்பிள்ளைக்கிட்ட எப்படி சொல்றதுனுதான்..

மனசை இறுக்கிக்கொண்டு சுந்தரேசன் செல்லில்..

ஹலோ மாப்பபிள்ளை...
ஆரம்பிக்கும்போது ...பத்மா சொன்னாள் "கொஞ்சம் ஸ்பீக்கர்ல
போடுங்க..நாங்களும் கேட்கிறோம்.
.
ஹலோ மாமா..நானே பேசனும்னு
நினைச்சேன்.
வாழ்த்துக்கள் மாமா..என்றான்
இன்னும் இரண்டு வருஷம் எக்ஸ்டென்சன்..அதற்குள் பிடிஒ
ஆகிடுவீங்க..மாமா அப்படி ஆவதில் ரொம்ப சந்தோஷம்..
அதில்லை மாப்பிள்ளை..நான்
சொல்ல வந்தது என்னன்னா..
நா தளுதளுத்தது.
மாமா என்னாச்சு..

நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம்.
கல்யாண வேளையை பதறாமல்
பாருங்க..
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு
தெரியும் மாமா...
கவலைப்படாதிங்க..நானும் நியூஸ்
பார்த்ததிட்டுத்தான் பேசுறேன்.
நான் மதுமிதாவை பெண் பார்க்க
வந்து பிடித்துப்போய் உடனே
கல்யாணத்தேதி பிக்ஸ் பண்ணனும்னு நாங்கள் கேட்டபோது
நீங்கள் உறுதியாக நான் ரிடையர்டு
ஆகிடுவேன்..ஒன்னும் பிரச்சனையில்லை அப்படினு
சொல்லும்போதே புரிஞ்சிக்கிட்டேன்.
அந்த பணத்தைத்தான் நீங்க நம்பி
இருந்தீங்கனுதான்.

பத்மாவும் மதுமிதாவும்
ஆர்வமாக கேட்டார்கள்

இந்த பாருங்க மாமா..
எனக்கு ஐ.டி கம்பெனியில கைநிறைய சம்பளம்.என் அக்கவுண்ட்ல ட்வெண்டி லாக்ஸ்
சும்மாதான் இருக்கு..
அதை வச்சு கல்யாணத்தை முடிங்க..

அது.. வந்து.... தடுமாறினான் சுந்தரேசன்..
ஓகே.. உங்க சுயகவுரம் தடுக்குது.
அப்படித்தானே..
பரவாயில்லை...இதை கடனா
வாங்கிக்கிங்க...ரிடையர்டு ஆகும்போது தாங்க..நோ இஸ்யூ..

மதுமிதாவிற்கு மனசில் சொல்ல
முடியாத சந்தோஷம்..வரப்போறவர்
இவ்வளவு நல்லவரா...நம்ப
முடியலை..அதுவும் இந்தக் காலத்தில்..

பத்மாவிற்கு இருப்பு கொள்ளவில்லை.கணவரைப் பார்த்தாள்..

பிரபஞ்சன் தொடர்ந்தான்.
என் மனசுதான் என் அப்பா அம்மாவுக்கும்..
நம்ம இரண்டு குடும்பத்தைத் தவிர
யாருக்கும் தெரியப்போறதில்லை..
எனக்கு மதுமிதாவை ரொம்ப
பிடிச்சிருக்கு..பணத்துக்காக
எதுக்காக இன்னும் இரண்டு வருஷம் தள்ளிப்போகணும்..

மதுமிதாவிற்கு கண்களில்
ஆனந்தக் கண்ணீர்..அவளது
அப்பா அம்மாவிற்கும்தான்...

எழுதியவர் : ரவிராஜன் (3-Nov-22, 6:32 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : avan veru maathiri
பார்வை : 88

மேலே